News24Tamil Logo

பில்லி, சூனியத்தின் உண்மைகள்: புதைந்துள்ள மர்மங்கள் விலகுகிறது...

 
Topics : #Astrology

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது விவாதத்துக்கு உரிய விடயமாக எப்படி பார்க்கப்படுகிறதோ அதே போல தான் ஏவல், பில்லி, சூனியம் போன்ற விடயங்களும் இருந்து வருகிறது!.

நல்லது என இருந்தால் தீமைகள் என்பதும் இருக்க தான் செய்யும் என்பது இயற்கையின் நீதி!.

சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள்.

அவர்களது கூற்று ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஏவல் பில்லி, சூனியம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது.

பலர் நிஜத்திலும் இதை அனுபவித்ததாக கூறுகிறார்கள். இது சம்மந்தமான ஒரு உண்மை உதாரணத்தை காண்போம்.

அவர் மலேசியாவில் வியாபாரம் செய்து வரும் ஒரு தொழிலதிபர் .மிகவும் இரக்க சுபாவம் கொண்ட அவரின் வியாபாரத்தில் பணம் கொடுத்தல், வாங்கல் என்பது சகஜம்.

வியாபார நிமித்தமாக நெருங்கிய நண்பர் ஒருவருக்கு பெரிய தொகையை நம்பிக்கை அடிப்படையில் எந்த அத்தாட்சியும் இல்லாமல் அவரிடம் கொடுத்துள்ளார்.

அதை திருப்பி தருவதாக கூறிய அந்த நபர் பின்னர் நான் உன்னிடம் பணம் வாங்கவேயில்லை, நான் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளதா என திமிராக அவரிடம் கேட்க, அந்த தொழிலதிபர் பலர் முன்னிலையில் அந்த நபரை என் தராதரத்துக்கு சரிசமமில்லாத உன்னிடம் பழகியது என் தப்பு என அசிங்கபடுத்தி பொலிசாரிடம் அவரை பிடித்து கொடுத்துள்ளார்.

பின்னர் நாட்கள் சென்றன, நன்றாக இருந்த தொழிலதிபருக்கு திடீரென காய்ச்சல் வந்தது. மருத்துவரிடம் சென்று காட்டிய மருந்துகள் சாப்பிட்ட பின்னும் சரியாகாமல் வேறு வித உடல் உபாதைகளும் வர ஆரம்பித்தன.

அவர் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் வீட்டிலிருந்தவர்கள் இது பில்லி, சூனியத்தால் என கூறி தொழிலதிபரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்து சென்றனர்.

மந்திரவாதியோ நீங்கள் யாரையோ அவமானபடுத்தியதில் அவர்கள் தான் உங்களுக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என கூற அவருக்கு பணம் ஏமாற்றி தான் பொலிசிடம் பிடித்து கொடுத்த அந்த நபரின் ஞாபகம் தான் வந்தது. பின்னர் தொடர்ந்து சில வாரங்களாக மந்திரவாதி எதோ மந்திரங்கள் செய்து வந்தார்.

அதே நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சையும் நடக்க எப்படியோ அவர் உடல் நிலை சரியாகி விட்டது.

அது மந்திரத்தால் சரியானதா? மருத்துவத்தால் சரியானதா? என அவர்களாலேயே கணிக்க முடியவில்லை என்பது தான் இதில் முக்கிய விடயமாகும்.

இது எப்படியோ பில்லி, சூனியம் போன்றவைகள் உண்மையா? பொய்யா? என்பதை யாரும் 100 சதவீதம் இன்னும் நிரூபிக்கவில்லை என்பதே யதார்த்தமாகும்.

 
Topics : #Astrology
 
 
 
 
News24Tamil Logo