News24Tamil Logo

300 பேரின் உயிரை காப்பாற்றி தன்னுயிரை ஈந்த சூப்பர் ஹீரோ

 
Topics : #India #Dubai

துபாய் விமான விபத்தில் 300 பயணிகளை காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த மீட்பு வீரரின் பணி போற்றத்தக்கது ஆகும்.

நேற்று (03.08.2016) திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர் தப்பினார்கள். ஆனால் எமிரேட்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தபோது பயணிகளை மீட்க போராடிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார்.

பயணிகளை மீட்கும் போது படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற தீயணைப்பு வீரர்களும் காயம் அடைந்து உள்ளனர், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படாத நிலையில், அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
 
 
News24Tamil Logo