News24Tamil Logo

உங்கள் கைகள் இப்படி இருக்கிறதா? அப்படியென்றால் உங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள் !

 
Topics : #Astrology

ஒருவரின் கைகளின் அமைப்பு எப்படி உள்ளதோ அதற்கு ஏற்ற அவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

மிருதுவான கைகள்

ஒருவரின் கைகள் மிகவும் மிருதுவாக இருந்தால், அவர்கள் முயற்சி செய்யும் அனைத்து வேலைகளுமே தடையின்றி, நிறைவேறுவதுடன், அந்த செயலினால் அவர்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.

மேலும் இவர்கள் தர்மம் போன்ற காரியங்களில், அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

வறட்சியான கைகள்

ஒருவரின் கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியுமாறு, இருந்தால், அவர்களின் குடும்பத்தில், சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களின் குடும்பஸ்தர்களே எதிரியாக இருப்பார்கள்.

உள்ளங்கை பள்ளமான கைகள்

உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருந்தால், அவர்கள் உண்மையை மட்டும் பேசுபவர்கள், மிகவும் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். அதுவே உள்ளங்கை அதிக பள்ளமாக இருந்தால், அவர்கள் எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பார்கள்.

நீளமான கைகள்

கைகள் நீளமாக இருந்தால், அவர்கள் தன் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொள்பவராக இருப்பார்கள். தனது துணைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.

சமமான கைகள்

கைகள் சமமாக இருந்தால், அவர்கள் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவராகவும், பெரியவர்களிடம் தனி மரியாதைகள் மிக்கவராக திகழ்வார்கள்.

மென்மையான கைவிரல்கள்

கைகளின் விரல்கள் மென்மையாக இருந்தால், அவர்கள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். தனது துணைக்கு அதிக மதிப்புகளைக் கொடுப்பார்கள். அனைவரும் பாராட்டும் வகையில் நடந்துக் கொள்வார்கள்.

கைகளின் விரல்கள் பருமனாகவும், முரட்டுத் தன்மையாக இருப்பவர்கள், உழைத்து சம்பாதிப்பவராகவும், அதிக பொறாமைக் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

நகங்களின் அமைப்பு

ஒருவரின் கைவிரல்களில் இருக்கும் நகங்கள் சொத்தையாகவும், கருப்பாகவும் இருந்தால், அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் வறுமை மற்றும் கஷ்டங்களை அனுபவித்து, பலரின் பழிப்புகளுக்கு ஆளாகுவார்கள்.

விரல் நகங்கள் சிவந்து, அழகாக இருந்தால், அவர்கள் ஆரோக்கியமாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

 
Topics : #Astrology
 
 
 
 
News24Tamil Logo