News24Tamil Logo

இதை ரெண்டு நிமிஷம் படிங்க! அப்பறம் உங்க வாழ்க்கையே சொர்க்கம் தான் !

 
Topics : #Happy

உலகம் வேகமாக ஓடுகிறது, அதனுடன் சேர்ந்து மனிதர்களாகிய நாமும் ஓடுகிறோம். எல்லோரிடத்திலும் ஒருவித மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கிறது.

உடலையும், மனதையும் ரிலாக்சாகவும் பிரஷ்ஷாகவும் வைத்து கொள்ள என்ன செய்யலாம்?

தள்ளி போட வேண்டாம்

அப்பறம் பார்த்து கொள்ளலாம்! கல்வி பயில்கிறவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை இதை செய்வார்கள், இது தவறு. எந்தவொரு பணியையும் அப்போதே முடித்தால் பிரச்சனை இருக்காது. பிறகு செய்து கொள்ளலாம் என தள்ளி போட்டால் வீண் டென்ஷன் தான் ஏற்படும்.

சுத்தமே சுகாதாரம்

வீடு சுத்தமாக இருந்தால் மனது சுத்தமாக இருக்கும். வீட்டில் குப்பைகள் சேர விடாமல் அப்புறப்படுத்தி கொண்டே இருங்கள். வீடு அழகாக இருந்தால் நமக்குள் அது ஒரு தன்னம்பிக்கையை தரும்.

உடல் மேல் அக்கறை

கண்டதை சாப்பிட்டு விட்டு உடலை கெடுத்து கொள்ளாமல், டயட்டை பராமரிப்பது உடலுக்கு நன்மை பெயர்க்கும். An Apple Keeps a Doctor Away என்ற பழமொழிக்கேற்ப ஆப்பிள் போன்ற சத்துள்ள பழங்களை தினமும் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதுக்கும் வலு சேர்க்கும். அதனால் இதற்கென தினம் சில மணி நேரங்கள் ஒதுக்கினால் அந்நாள் சுறுசுறுப்பாக நகரும்.

புத்தகம் வாசித்தல்

தற்போதைய தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதள யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் பலரிடம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. புத்தகம் படிப்பதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும் மற்றும் நம் அறிவு வளரும்.

நேரத்தை செலவிடுங்கள்

எப்போதும் வேலை என இருந்தால் உடல் மற்றும் மனபிரச்சனைகள் தான் ஏற்படும். நமக்கு யார் மேல் அதிக அன்புள்ளதோ அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் மற்றும் இயற்கையான சூழல் இருக்கும் இடத்துக்கு போய் வந்தால் மனது குதுகலமாக இருக்கும்.

 
Topics : #Happy
 
 
 
 
News24Tamil Logo