News24Tamil Logo

பாழடைஞ்ச பங்களாவில் அமானுஷ்ய சக்தி..! ப்ரியா ஆனந்தின் திக் திக் அனுபவங்கள்

 
Topics : #Cinema #Tamil

மயிலாடுதுறையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர், ப்ரியா ஆனந்த். தற்போது ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘அரிமா நம்பி’, ‘இரும்பு குதிரை’, ‘வை ராஜா வை’ என வேகமாக சென்று கொண்டிருந்தவருக்கு, இப்போது பிரேக். ‘ஏன் என்னாச்சு?’ என்றால் கொஞ்சம் சீரியசாகிறார்.

‘‘எனக்கு அப்படித் தோணலையே. ஹீரோவை சுத்தி சுத்தி வந்து, சிரிச்சு, காதலிச்சு டூயட் பாடிட்டு போற கமர்ஷியல் ஹீரோயினாகுறது எனக்கு பிடிக்கல. சொன்னா நம்ப மாட்டீங்க. அப்படி வந்த பல படத்தை நான் மறுத்திட்டேன். ஒரு படத்துல நடிச்சா அதுல நடிச்சதுக்காக நான் முதல்ல பெருமைப்படணும். பணம், புகழ் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் அப்புறம்தான். இப்பவும் நான் பிசியாத்தான் நடிக்கிறேன். முதன் முதலா ‘எஸ்ரா’ என்ற மலையாளப்
படத்துல பிருத்விராஜ் ஜோடியா நடிக்கிறேன். ‘ராஜ்குமாரா’ என்ற கன்னடப் படத் தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கிறேன். நான் வீட்டுக்கு போய் 45 நாள் ஆகுது. அந்த அளவுக்கு பிசியா இருக்கேன்...’’ என்கிறார்.

‘முத்துராமலிங்கம்’ படத்தில் என்ன கேரக்டர்?

முதன் முறையாக, கிராமத்துப் பெண் கேரக்டர். என்னை எல்லோரும் அமெரிக்க ரிட்டர்ன் பொண்ணாத்தான் பார்க்குறாங்க. ஆனால், எனக்குள்ள இருக்கிறது கிராமத்துப் பொண்ணுதான். இப்பவும் சொந்த ஊருக்கு போயிட்டா, சொர்க்கத்துக்குப் போறது மாதிரி ஃபீல் பண்றேன். நான் விரும்புகிற வேடம், இப்போ எனக்கு கிடைச்சிருக்கு. படம் முழுக்க பாவாடை தாவணி அணிந்து நான் விரும்புற வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்கேன்.

ஏதோ படத்துக்கு நிதி உதவி செஞ்சீங்களாமே?

நான்கு பேருக்குள்ள நடந்த விஷயம், எப்படி வெளியில வந்துச்சுன்னு தெரியல. நான் அப்படி பண்ணினேன். இப்படி பண்ணினேன்னு விளம்பரம் தேடிக்கவும் விரும்பல. நான் ஒரு படத்துல நடிச்சா அதில் என்னை நடிகையாக மட்டும் நினைக்கிறதில்ல. அந்த படத்துல எனக்கும் அக்கறை இருக்கு. சினிமா தயாரிப்புல சில இடர்பாடுகள் வர்றதும்  ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கிறதும் சாதாரணமானதுதான். அவ்வளவுதான். அதை பெருசா பேச 
வேண்டாம்னு நினைக்கிறேன்.
கவுதமுக்காகத்தான் ‘முத்துராமலிங்கம்’ படத்துல நடிக்கிறதா சொல்றாங்களே?


சத்தியமா இல்ல. அவர் அப்பா கார்த்திக் சாருக்காகத்தான் நடிக்கிறேன். படத்துல வர்ற ஒரு முக்கியமான கேரக்டர்ல அவர்தான் நடிக்கிறதா இருந்தது. அதான் ஒப்புக்கிட்டேன். சின்ன வயசிலிருந்தே நான் கார்த்திக் சார் மற்றும் ஸ்ரீதேவி மேடத்தோட ரசிகை. ஸ்ரீதேவி மேடம்கூட நடிச்சாச்சு. கார்த்திக் சாருடனும் நடிச்சிட்டா என் ஆசை நிறைவேறிடும். அதுக்காகத்தான் நடிக்கிறேன். ஆனா, கடைசி நேரத்துல 
சில காரணங்களால் அவர் நடிக்க முடியாம போயிடுச்சு.

அப்போ உங்க காதல் செய்தி?

முன்பெல்லாம் என்னோட காதல் செய்தியை படிக்கும்போது டென்ஷனா இருக்கும். இப்படியெல்லாம் எழுதுறாங்களேன்னு கவலையா இருக்கும். சினிமாவுக்கு வந்து ஏழு வருஷங்களாச்சு. எல்லோரையும் போல நானும் அந்த செய்திகளை சுவாரஸ்யமா படிக்க ஆரம்பிச்சிட்டேன்.

மலையாள ‘எஸ்ரா’ பட ஷூட்டிங்ல அமானுஷ்ய சக்திகளை உணர்ந்தீங்களாமே?

அந்தப் படத்தோட ஷூட்டிங், போர்ட் கொச்சிங்கற இடத்துல இருக்கும் பாழடைஞ்ச பங்களாவுல நடந்தது. ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, திடீர் திடீர்னு விளக்குகள் அணையும். முதல்ல, மின் கோளாறா இருக்கலாம்னு நினைச்சோம். பிறகு ஜெனரேட்டர் பழுதாச்சு. வேற ஜெனரேட்டரை கொண்டு வந்தோம். பிறகும் பிரச்னை. கேமராவும் ரிப்பேராச்சு. இதனால எல்லாருக்கும் பயம் வந்துடுச்சு... அப்புறம் ஒரு பாதிரியாரை வரவழைச்சு பிரார்த்தனை பண்ணினோம். அதுக்குப் பிறகுதான் எல்லாம் சரியாச்சு.

                                                       

 

 
 
 
 
 
News24Tamil Logo