News24Tamil Logo

உடல் எடையை அதிகரிக்கும் சீதாப்பழம்

 
Topics : #Health #Hair

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் தான் சீதாப்பழம், இது தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது.

100 கிராம் சீதாப்பழத்தில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து- 70.5%, புரதம்- 1.6%, கொழுப்பு- 0.4%, நார்ச்சத்து- 3.1%, கால்சியம்- 17 மில்லி கிராம், பாஸ்பரஸ்- 47 மில்லி கிராம், இரும்புச்சத்து- 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி-37 மில்லி கிராம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து- 23.5%, கலோரி அளவு- 10.4% ஆகும்.

மருத்துவ பயன்கள்

  • காய்ச்சலை குணப்படுத்தும். செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும்.
  • இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகள் பலப்படும்.
  • விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும், பேன்கள் ஒழிந்து விடும்.
  • சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது, பொடுகு மறைந்துவிடும்.
  • சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
  • இதில் காப்பர் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது, இதனை சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
  • கண்பார்வையை பலப்படுத்துதல், இரத்தசோகையில் இருந்து காப்பாற்றுதல் போன்ற பணிகளை செய்கிறது.

குறிப்பு

உடல் எடையை அதிகரிக்கும் பழம் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

 
 
 
 
 
News24Tamil Logo