திரிஷா நடிப்பில் அண்மையில் வெளியான கொடி படம் அவருடைய இமேஜையே மாற்றிவிட்டது.
இதுவரை அழகான நாயகியாக மட்டும் நடித்துவந்த திரிஷா புது வேடங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் என்னை வேறு கோணத்தில் யோசித்து எனக்காக கதை தயார் செய்யுங்கள் என்று கூறிவருகிறாராம்.
அதோடு பாலிவுட் நாயகிகளான வித்யா பாலம், பிரியங்கா சோப்ரா போன்ற நாயகிகளின் படங்களை சுட்டிக்காட்டி இது போன்ற கதைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாராம். இதனால் அவருக்கான மிகவும் வித்தியாசமான கதை தயார் செய்வதில் பெறும் யோசனையில் உள்ளனராம் சில இயக்குனர்கள்.