News24Tamil Logo

கடல் கரையில் ஏற்பட்ட புதை குழியில் அவர்கள் கால்கள் சிக்கி இருக்கலாம்- புதிய ஆதாரங்கள்

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் 5 ஈழத் தமிழ் இளைஞர்கள், கடல் கரையில் இறந்து போன விடையம். பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை வேற்றின மக்களிடையே தோற்றுவித்துள்ளது. அத்தோடு பல விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி விசாரணைகள் நடைபெறவேண்டும் என்ற கோரிக்கை வலுக்க காரணமாகியுள்ளது. குறித்த 5 தமிழ் இளைஞர்களும் கடல் கரையில் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்கள். இன் நிலையில் தான் அவர்களில் ஒருவர் நீரில் மூழுகியுள்ளார். இவரைக் காப்பாற்ற ஏனைய 4 பேரும் முனைந்த வேளை அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.


முதலாவதாக சிக்கிய நபர் திடீரென ஏற்பட்ட புதை குழியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக கடல் கரையில் இதுபோன்ற திடீர் புதை குழி ஏற்பட்டால். அதன் அருகே சில மீட்டரில் மேடான ஒரு குன்று உருவாவது வழக்கம். இவை பொதுவாக 2 பக்கமும் ஏற்படும். இதனால் கரையை நோக்கி வரும் அலை அதிசக்தியோடு வந்து. அது மீண்டு செல்லும் போதும் அதிவேகத்தோடு இழுத்துச் செல்லும். (அதாவது பரந்த கடல் பரப்பில் அலை கரையை நோக்கி வரும்போது வேகமாக இருக்காது) ஆனால் அதுவே இரண்டு பக்கம் அடைக்கப்பட்டு நடுவில் ஒரு சிறிய வழியால் தான் வரவேண்டும் என்றால். அது அந்த சிறிய பாதை ஊடாக வேகமாக வரும் அல்லவா. அது போன்ற ஒரு நிகழ்வே இங்கே நடந்துள்ளது. இவ்வாறு இழுத்துச் செல்லும் அலையானது ஒருவரை தண்ணீரில் தாழ்காது.


ஆனால் நாம் உடனே இயற்கையாக என்ன செய்வோம் என்றால், உடனே கரையை நோக்கி நீந்தி ஆரம்பிப்போம். ஆனால் கரையில் இருந்து கடல் நோக்கி செல்லும் அலை அதனை தடுக்கும். இதனால் கடுமையாக நாம் போராடி, மூச்சை இழந்து , பதற்றமாகுவோம். இதன்காரணமாகவே பலர் இறக்கிறார்கள். இவ்வாறு நடந்தால், உடனே நாம் கடல் கரை நோக்கி நீந்த முயற்சிக்க கூடாது. மாறாக சமாந்தரமாக கடலின் இடது அல்லது வலது பக்கம் நீந்த வேண்டும் . இவ்வறு நாம் சற்று நேரம் நீந்தினால். குறித்த கடல் நீரோட்டம் சற்று நேரத்தில் விசை குறையும். அதன் பின்னர் நாம் கரை நோக்கி நீந்த ஆரம்பித்தால், உயிர்பிழைத்துக் கொள்ளலாம் என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆங்கில இணையங்கள் பல “குவிக் சான்ட்” என்று அழைக்கப்படும் மற்றும் “ரிப் டைட் என்னும் அலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக தற்போது தான் பிரித்தானியாவில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. அதுவும் 5 ஈழத் தமிழ் இளைஞர்கள் பலியான பின்னர்.


மேலும் சம்வம் நடந்த இடத்தில் , லைஃப் காட் இல்லை என்றும் கூறப்படுகிறது. அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அந்த மாநகரக் கவுன்சில் பல மில்லியன் பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவேண்டி வரும். இலங்கையில் பிரச்சனை. லண்டன் வந்தால் உயிர்பிழைக்கலாம் என்று இங்கே வந்தேன். ஆனால் இங்கே எனது 2 மகன்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது, என்று மிகவும் உருக்கமாக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார், தந்தை.

 
 
 
 
 
News24Tamil Logo